×

வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் சாலையோர மரங்களில் மின்கம்பிகள் உரசி தீப்பொறி ஏற்படுவதால் மக்கள் அச்சம்நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வலங்கைமான், அக்.16: வலங்கைமான் பேரூராட்சிப்பகுதியில் கடைத்தெரு, எல்லையம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பல இடங்களில் மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுகின்றது. அதே போல் சில இடங்களில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றது. இவைகளை சரி செய்ய பலமுறை கோரிக்கை விடுத்தும் மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில் வலங்கைமான் பேரூராட்சிப்பகுதியில் மணவெளித்தெரு சுடுகாடு வழிநடப்பு பகுதியில் சாலை ஓரத்தில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் மும்முனை மின்சாரம் கொண்டு செல்லப்படுகின்றது. இந்த மின்கம்பிகள் மூலம் ரைஸ் மில், மரம் அறுக்கும் மில் மற்றும் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மின்சாரம் செல்கின்றது. இவ்வழித்தடத்தில் பள்ளிக்கூடம் அருகே மின்கம்பிகள் மீது அடர்ந்த மரங்கள் உரசிக்கொண்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகின்றது.

மேலும் சில நேரங்களில் மின்கம்பிகளில் இருந்து தீப்பொறிகள் கொட்டுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்துடனே வசிக்கின்றனர். மேலும் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசும் போது உயர்மின் அழுத்த மின்சாரம் வருமோ எனவும் அச்சமடைகின்றனர்.
எனவே வலங்கைமான் மின்சார வாரியம் மேலும் காலதாமதம் செய்யாமல் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் மின்கம்பிகளின் மீது அடர்ந்து காணப்படும் மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Residents ,area ,Valangaiman Beirutci ,
× RELATED கரூர் பகுதியில் சூறாவளி காற்று மின்தடையால் மக்கள் அவதி