×

பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிகல்லூரியில் பேரிடர் மீட்பு ஒத்திகை செயல் விளக்கம்

திருத்துறைப்பூண்டி,அக்.16: திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் பல்கலைக் கழகமாதிரிக் கல்லூரியில் திருவாரூர் மாவட்ட இண்டியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி கல்லூரி முதல்வர் சக்திவேதலைமையில் நடைபெற்றது.திருத்துறைப்பூண்டி இண்டியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் எடையூர் மணிமாறன் வரவேற்றார். தீ தடுப்பு மற்றும் மீட்புபணிகள் துறை, காவல்துறை, போக்குவரத்து காவல்துறை, பொது சுகாதாரத்துறை, 108 ஆம்புலன்ஸ் அமைப்பு, திருவாரூர் டெம்பிள் சிட்டி ரோட்டரிசங்கம், கல்லூரி நாட்டுநலப்பணித்திட்டம் ஆகியவற்றுடன் இணைந்து திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் பல்கலைக் கழகமாதிரிக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பேரிடர் காலங்களில் பாதிக்கப்படுவோரை முறையாகஎவ்வாறுகாப்பாற்றுவது என்பது குறித்து நடைபெற்ற மீட்பு ஒத்திகைபயிற்சியில் மாணவ, மாணவியர்கள்மத்தியில் இயற்கை பேரிடர் காலங்களில் மக்கள்எவ்வாறு முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் பேரிடர் காலங்களில் சிக்கினால் எளிதாக எப்படி தப்பிப்பது, வீடுகளில் காஸ் சிலிண்டரால் ஏற்படும் ஆபத்துகளை தடுப்பது, மழை வெள்ளக்காலத்தில் நீரில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்றுவது, புயல் மழைக்காலங்களில் மின்கசிவு நேரத்தில் மக்கள் எவ்வாறு இருக்க வேண்டும், குழந்தைகள், விலங்குகளை எப்படி பாதுகாப்பது உள்ளிட்ட கருத்துக்களை தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து அடுக்குமாடி கட்டிடத்தில் பேரிடர் காலங்களில் மாட்டிக் கொண்டால் எப்படி காப்பாற்றுவது என தீயணைப்பு வீரர்கள் தார்பாய் விரித்தும், ஏணி வைத்தும், கயிறு கட்டியும் மக்களை மீட்பது போன்று தத்ரூபமாக செய்து காட்டினார்.அதனை தொடர்ந்து நீரில் மக்கள்சிக்கினால் கிடைத்ததை கொண்டு எப்படி தண்ணீரில் குதித்து காப்பாற்றி வருவது, மேலும் பேரிடர் காலங்களில், அதாவது வெள்ளத்தில் சிக்கிக் கொண்டால், தீ விபத்து ஏற்பட்டால், மின்சாரம் தாக்கினால் அதிலிருந்து எப்படி தப்பிப்பது, மீட்பது, முன்னெச்சரிக்கை குறித்து பல்வேறு செயல் விளக்கம் நடைபெற்றது. இதில் தீயணைப்பு நிலைய முன்னனி தீ தடுப்பு பொறுப்பு அலுவலர் ராஜகுமார், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் கருப்பண்ணன், பேரிடர் காலதலைமைபயிற்றுனர் பெஞ்சமின், இளையோர் ரெட்கிராஸ்சரகமாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன், கன்வீனர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்பாக பயிற்சிஅளித்தனர். நிகழ்ச்சியில் பொறியாளர் செல்வகணபதி, கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திலகர், விரிவுரையாளர்கள் ஆகியோர் ஒத்திகைநிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags : Disaster Rehearsal Rehearsal ,Bharathidasan University Model Gallery ,
× RELATED தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி...