ஆர்எஸ்எஸ் சங்க ஆண்டு விழா அணிவகுப்பு

திருவையாறு, அக். 16: திருவையாறில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவ சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) சார்பில் விஜயதசமி விழா, தமிழகத்தில் சங்கம் தொடங்கிய 80ம் ஆண்டு மற்றும் மகாத்மா காந்தி பிறந்த நாள்விழா அணிவகுப்பு பொதுக்கூட்டம் நடந்தது.நேற்று மாலை அணிவகுப்பு ஊர்வலம் புஷ்யமண்டப படித்துறையில் துவங்கி திருவையாறு நான்கு வீதி வழியாக வந்து தேரடியில் முடிவடைந்தது. பின்னர் தேரடியில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு திருவையாறு தொழிலதிபர் முத்துராமன் தலைமை வகித்தார்.
ராஜகோபால் அறக்கட்டளை கல்வி நிறுவனர் டேவிஸ் வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். பாரதிய ஜனதா கட்சி மாநில அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பாரதிய ஜனதா பிரமுகர்கள், ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.


Tags : RSS Association Anniversary Parade ,
× RELATED மூதாட்டி இறுதி ஊர்வலத்தில் வீடு அருகே பூக்களை வீசியதால் தகராறு