×

வேளாண் பேராசிரியர்கள் வழிகாட்டல் குன்னம் பகுதி கடைகளில் 15 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

பெரம்பலூர், அக். 16:  குன்னம் பகுதியில் உள்ள கடைகளில் வட்டார வளர்ச்சித்துறையினர் ஆய்வு நடத்தி தடை செய்யப்பட்ட 15 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.பெரம்பலூர் கலெக்டர் நடந்த கூட்டத்தில் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர், பேரூராட்சி செயல் அலுவலர்கள் அந்தந்த பகுதிகளில் ஆய்வு நடத்தி தடை செய்யப்பட்ட, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளை, பொருட்களை பறிமுதல் செய்ய கலெக்டர் சாந்தா உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் பெரம்பலூர் மாவட்டம்,வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குன்னத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துகின்றனரா என வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி ஊ) மரியதாஸ் தலைமையில் சுகாதார துறையினர், ஊராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். அதில் பஸ் நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், பெட்டிக்கடைகள், இறைச்சிக்கடை , ஹோட்டல்களில் பிளாஸ்டிக் பை பயன்படுத்தப்படுகிறதா என்று சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் இருந்த கடைகளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள் இருந்ததை கண்டுபிடித்து 15கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். அப்போது பிளாஸ்டிக் பைகள் தொடர்ந்து பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதாஸ் எச்சரிக்கை விடுத்தார்.  ஆய்வின்போது சுகாதார ஆய்வாளர் கந்தசாமி, ஊராட்சி செயலாளர் ரவி, ஊராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.


Tags : Agriculture professors ,area stores ,Gujnam ,
× RELATED கும்பகோணம் பகுதி கடைகளில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்