×

அதிகாரி அறிவுறுத்தல் அரியலூர் ரயில் நிலையத்தில் முன்பதிவு கால நேரத்தை அதிகப்படுத்த கோரிக்கை

அரியலூர்,அக்.16: அரியலூர் ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்யப்படும் கால நேரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அஜய்குமாரிடம், தேசிய சிமென்ட் லோடிங் தொழிலாளர் சங்க பொதுச் செயலர் சிவக்குமார், சமூக ஆர்வலர் ரவீந்திரபோஸ், திமுக நகரச்செயலாளர் முருகேசன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தார்.அரியலூர் ரயில் நிலையத்தை நேற்று ஆய்வு செய்ய வந்த திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அஜய்குமாரிடம், அவர்கள் அளித்த கோரிக்கை மனுவில், முதலாவது நடைமேடையில் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்பதிவு செய்யப்படும் காலநேரத்தை அதிகப்படுத்த வேண்டும். பயணச்சீட்டு வழங்கும் பிரிவில் இருவர் நியமிக்க வேண்டும். விரைவு ரயில்கள் அனைத்தும் அரியலூரில் நின்றுச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலாவது நடைமேடையில் மேற்கூரை அமைக்க வேண்டும், விழுப்புரம்-மதுரை பயணிகள் ரயிலை குறித்த நேரத்தில் இயக்க வேண்டும், திருச்சியிலிருந்து லால்குடி வரை வரும் பயணிகள் ரயிலை அரியலூர் வரை நீட்டிக்க வேண்டும், ரயில்வே மேம்பாலப்பணிகளை விரைவாக முடித்து இரு புரமும் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் அதில் தெரிவித்தனர்.இதனை பெற்றுக்கொண்ட கோட்ட மேலாளர் அஜய்குமார், மனுமீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து ரயில்வே நடைமேடைகள், கழிவறைகள், அலுவலக அறைகள், தொழில்நுட்ப அறைகள், கோப்புகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.

Tags : Ariyalur Railway Station ,
× RELATED 387 மையங்களில் முகாம் நடைபெற்றது...