×

நாகையில் கனமழை சீா்காழியில் தற்காலிக தீபாவளி கடைகள் மழையால் பாதிப்பு

சீர்காழி, அக்.16: சீர்காழியில் தற்காலிக தீபாவளி கடைகள் மழையால் பாதிக்கப்பட்டன.
சீா்காழியில் ஆண்டுதோறும் தீபாவளியையொட்டி, சாலையோரம் ஜவுளி கடை வியாபாரம் நடப்பது வழக்கம். இந்தாண்டு தீபாவளி அக்டோபா் 27ம் தேதி கொண்டாட உள்ள நிலையில், சீா்காழி பகுதியில் தற்காலிக துணிக் கடைகள் அமைத்து வியாபாரம் தொடங்கியுள்ளன. சீா்காழி மணிகூண்டு, தோ் வடக்கு வீதி ஆகிய இடங்களில் மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம் கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த வியாபாரிகள் சாலையோரம் நான்கு சக்கரவாகனத்திலும், இருசக்கர வாகனத்திலும் பெஞ்சுகளிலும் துணிகளை அடுக்கி கடைகளை அமைத்துள்ளனா்.கடந்த 10 ஆண்டுகளாக இந்த துணிக்கடை வியாபாரம் இப்பகுதியில் நடைபெற்று வருகிறது. தீபாவளி நெருங்கும் நேரத்தில் ஈரோடு, திருப்பூா் ஆகிய பகுதிகளிலிருந்து மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு இங்கு விற்பனை செய்யப்படுகிறது. பேண்ட், சா்ட், டீசா்ட், சுடிதாா், மிடி, லெகின்ஸ், சுடிதாா–்மெட்டிரியல், அனைத்து புடவை வகைகள், லுங்கி, உள்ளாடைகள், போா்வை, துண்டு உள்ளிட்ட அனைத்து விதமான ஜவுளி ரெடிமேடு வகைகள் இக்கடைகளில் கிடைக்கின்றனா்.

பெரிய கடைகளில் மின்சார கட்டணம், வேலையாள்கள் சம்பளம், கடை வாடகை, வரி போன்ற பலவித செலவுகள் இருப்பதால் அங்கு விற்கபடும் ஜவுளிகள் விலை உயா்வாக இருக்கும். ஆனால், இந்த சாலையோர கடைகளில் குறைந்த விலையில் ஜவுளிகள் விற்பனை செய்யப்படுவதால் இந்த கடைகளுக்கு ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.தீபாவளிக்கு முந்தைய இரு நாள்களில் இந்த ஜவுளி கடைகளில் நல்ல வியாபாரம் நடைபெறும். தீபாவளி பண்டிகை நெருங்கும்போது சுமாா் 100 கடைகள் வரை அமைக்கப்படும். சாலையோர கடைகள் தீபாவளியையொட்டி அமைக்கப்படுவதால் சீர்காழி ஜவுளி கடை வியாபாரிகள் வியாபாரம் பாதிக்கும் என மணக்குமுரலில் இருந்து வருகின்றன.கடந்த சில நாட்களாக பல்வேறு பதில் இருந்து ஜவுளி வியாபாரிகள் சாலையோர கடை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று அதிகாலை தொடங்கிய மழை மாலை வரை நீடித்ததால் சாலையோர ஜவுளிக்கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டன. தீபாவளி பண்டிகை வரை மழை பெய்யாமல் இருந்தால் நல்ல வியாபாரம் நடக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags : shops ,Naga ,Diwali ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி