×

கொள்ளிடம் புத்தூர் கடைவீதியில் நிலவேம்பு கசாயம் வழங்கல்

கொள்ளிடம், அக்.16: நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் கடைவீதியில் குன்னம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சித்த மருத்துவ அலுவலர் ஹேமா நிலவேம்பு கசாயம் வழங்கி முகாமை துவக்கி வைத்தார். மருத்துவ அலுவலர் பபிதா சுஜிதா, மருந்தாளுனர் ராஜாராமன், சுகாதார ஆய்வாளர்கள் கருணாகரன், சதிஷ்குமார் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பயனாளிகளுக்கு நேரில் சென்று நிலவேம்பு கசாயம் வழங்கினர். மழைக்காலம் நெருங்குவதால் காய்ச்சலை தவிர்க்கவும், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து காய்ச்சல்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள அனைவரும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து முன்னெச்சரிக்கையாக நிலவேம்பு கசாயம் பருக வேண்டும் என்று சித்த மருத்துவர் ஹேமா அறிவுறுத்தினார்.

Tags : Buttur road ,
× RELATED புதுச்சேரியில் மின்விநியோகத்தை...