×

கருவூலத்தின்படி ஊதியம் வழங்க ஊராட்சி செயலாளர்கள் கோரிக்கை

கொள்ளிடம், அக்.16: நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் வட்டார அளவிலான தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க கூட்டத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. தலைவர் வெற்றிவேந்தன் தலைமை வகித்தார். செயலாளர் சுமதி சுரேஷ்குமார் வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளர் சிவானந்தம் சிறப்புரையாற்றினார். கொள்ளிடம் ஒன்றிய புதிய தலைவராக வெற்றிவேந்தன், செயலாளராக சுமதிசுரேஷ்குமார், துணைத்தலைவராக தர், பொருளாளராக சரபோஜி, செயற்குழு உறுப்பினர்களாக குமார், சுதாகர், மகேஸ்வரி உள்ளிட்டோர் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் ஊராட்சி செயலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும், புத்தூர் ஊராட்சி செயலாளராக பணியாற்றி, இறந்த வரதராஜன் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு கரூவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஊராட்சி செயலாளர் சுதாகர் நன்றி கூறினார்.


Tags : Panchayat Secretaries ,Treasury ,
× RELATED நிறுத்தப்பட்ட ஊக்கத்தொகை மீண்டும்...