×

இருளில் மூழ்குவதால் சமூக விரோத செயல்கள் அரங்கேற்றம் மத்திய அரசு கொண்டுவந்துள்ள கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்துதல் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் மீனவர்கள் திரண்டனர்

நாகை, அக்.16: மத்திய அரசின் கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேலாண்மை சட்டத்தை எதிர்த்து நாகை மீன்வளத்துறை இணை இயக்குநர் அலுவலகம் முன்பு மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.தேசிய மீனவர் பேரவை துணைத்தலைவர் குமரவேலு தலைமை வகித்தார். அக்கரைப்பேட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மனோகரன், கலைவாணன், விஜயகுமார், குணசேகரன், கருணாமூர்த்தி முன்னிலை வகித்தனர். மீனவர்களையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் வகையில் வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் சாகர்மாலா, ஹைட்ரோகார்பன், அனல்மின், அணுமின் உள்ளிட்ட திட்டங்களையும் சட்டங்களையும் மத்திய கொண்டு வந்துள்ளது. இந்த சட்ட திட்டங்களை திரும்ப பெற வேண்டும் என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பின்னர் மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல்சேவியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதில் மீனவர்களையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் வகையில் வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் சாகர்மாலா, ஹைட்ரோகார்பன், அனல்மின், அணுமின் உள்ளிட்ட திட்டங்களையும் சட்டங்களையும் மத்திய கொண்டு வந்துள்ளது. அதே போல் மீனவர்களுக்கும், மீன்பிடிப்புக்கும் மொத்தமாக சாவு மணி அடிக்க மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேலாண்மை சட்டம் ஒட்டு மொத்த மீனவர்களின் வாழ்வாதாரம், வாழ்வுரிமை மற்றும் மீன் பிடிப்பு மீது பலமான தாக்குதல் நடத்துவதற்காக மத்திய அரசு கொண்டு வருகின்ற இந்த புதிய சட்டம் கடல் மைல் வரை மீன்பிடி ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேலாண்மை முழுவதையும் இந்திய கடற்படை கையில் ஒப்படைக்கப்படவுள்ளது.

மத்திய அரசுடன் பதிவு செய்யப்பட்ட படகுகள் மற்றும் மீன்பிடி கப்பல்கள் மட்டுமே கடலில் 200 நாட்டிக்கல் மைல் தூரம் சென்று மீன்பிடிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. மாநில அளவில் மீன்வளத்துறையில் பதிவு செய்யப்பட்ட படகுகள் 12 நாட்டிக்கல் மைல் தூரம் மட்டுமே மீன் பிடிக்க வேண்டும் என்று மறைமுகமாக சொல்லப்படுகிறது. அப்படி எனில் தமிழ்நாடு மற்றும் கடலோர மாநிலங்களில் நாட்டு படகு மற்றும் விசைப்படகுகள் 12 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மட்டுமே மீன்பிடியில் ஈடுபட வேண்டும். மீறினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இது மீனவர்களின் வாழ்வாதார உரிமைக்கு எதிரான சட்டம் மட்டும் இல்லை, இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கே எதிரானதாகும். எனவே மத்திய அரசின் கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேலாண்மை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

Tags : Fishermen ,protest ,Marine Fisheries Regulation Act ,
× RELATED வரும் 15ம் தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் தொடங்குகிறது