×

குளித்தலை குமாரமங்கலத்தில் எலி ஒழிப்பு மேலாண்மை குறித்து வேளாண். கல்லூரி மாணவர்களுக்கு செயல்விளக்கம்

குளித்தலை, அக். 16: நாமக்கல் பி ஜிபி தனியார் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 25 பேர் கரூர் மாவட்டம் குளித்தலை வேளாண்மை அலுவலகத்திற்கு களப்பணியாற்ற வந்துள்ளனர். அவர்கள் குளித்தலை வட்டாரத்தில் நெற்பயிர்கள் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டு வருவதால் நெல் சாகுபடி குறித்து செயல் விளக்கம் மற்றும் களப்பணி பற்றி அறிய வந்தனர். அப்போது வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு தற்போது குளித்தலை வட்டாரம் முழுவதும் நெல் அதிகளவில் பயிரிடப்பட்டு வருவதால் இளம் நெல் பயிர்களுக்கு முக்கியமான பிரச்னையாக எலிகளால் நெற்பயிர் நாற்றங்கால் மற்றும் வரப்புகள் மேலும் நன்கு விளைந்த நெற்பயிர் கதிர்கள் எவ்வாறு சேதப்படுத்துகிறது. இதனால் விவசாயிகள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகின்றனர் என விளக்கம் அளித்து பேசினர்.
இதில் வேளாண்மை முகமை அட்மா மேலாளர் செல்வேந்திரன் குளித்தலை வட்டாரம் குமாரமங்கலம் கிராமத்தில் நெல் வயல்களில் எலி ஒழிப்பு மேலாண்மை செயல்விளக்கம் வேளாண்மை தொழில்நுட்பம் குறித்து களப் பணியாற்றும் கல்லூரி மாணவர்களிடையே விளக்கம் அளித்து பேசினார். இதில் உதவி மேலாளர் பிரியதர்ஷினி, முன்னோடி விவசாயி பாலகிருஷ்ணன், வேளாண் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் கலந்து கொண்டு நெல் வயலில் எலி ஒழிப்பு மேலாண்மை குறித்து விளக்கம் கேட்டறிந்தனர்.

Tags : college students ,
× RELATED ஒரே பைக்கில் சென்றபோது அடையாளம்...