×

வாழைத்தார் கமிஷன் மண்டி எதிரில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார கேடு

கரூர், அக். 16: கரூர் நகராட்சிக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் இருந்து ரயில் நிலையம் செல்லும் சாலையோரம் வாழைத்தார் கமிஷன் மண்டி செயல்பட்டு வருகிறது.இந்த பகுதிகளில் வாழையிலை உட்பட பல்வேறு குப்பைகள் கமிஷன் மண்டி எதிரே கொட்டி வைக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது அகற்றப்பட வேண்டிய இந்த குப்பைகள் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் உள்ளதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாகவும், அருகில் குடியிருப்பவர்கள் இதனால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என முறையிட்டும் அள்ளப்படாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே கமிஷன் மண்டி எதிரே குவிந்துள்ள குப்பைகளை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : hill ,Mandi Mandi ,
× RELATED மழை காலங்களில் 5 கி.மீ சுற்றி...