×

கரூர் மாவட்டத்தில் 1.90 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போட திட்டம் கலெக்டர் தகவல்

கரூர், அக். 16: கரூர் மாவட்டத்தில் 1.90 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட திடடமிடப்பட்டுள்ளது என்று கலெக்டர் கூறினார்.கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பேரூராட்சிக்குட்படட குளத்துப்பாளையத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை கலெக்டர் அன்பழகன் துவக்க வைத்து தெரிவித்துள்ளதாவது:கோமாரி நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பசு மற்றும் எருமைகளுக்கு வருடத்திற்கு இரண்டு முறை மார்ச் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி கால்நடை பராமரிப்புத்துறையினாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 16 சுற்றுகள் தடுப்பூசி பணி நடைபெற்றுள்ளது.

17வது சுற்று தடுப்பூசி பணி அக்டோபர் 14ம்தேதி துவங்கி நவம்பர் 3ம்தேதி வரை நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள 1.90 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த பணிக்கு தேவையான தடுப்பூசி மருந்துகள், சிரிஞ்சுகள், ஊசிகள் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் குழுவில் ஒரு மருத்துவர், ஒரு ஆய்வாளர், ஒரு பராமரிப்பு உதவியாளர் என மூன்று நபர்கள் உள்ளனர்.
இதே போல் 60 குழுக்கள் அமைக்கப்பட்டு கரூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள கால்நடைகளுக்கு 100 சதவீதம் தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நவம்பர் 4ம் தேதி முதல் 12ம் தேதி வரை விடுபட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறும்.கோமாரி நோயானது கால்நடைகளை தாக்கி விவசாயிகளுக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. எனவே கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, தங்களது பசு, எருமை மற்றும் 3 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகளுககும் விடுபடாமல் தடுப்பூசி போட்டு, தங்கள் கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், துணை இயக்குநர் மோகன்ராஜ், உதவி இயக்குநர்கள் மணிமாறன், முரளிதரன், ஜெகதீசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Karur district ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்