×

திருக்கோவிலூர் அருகே வீட்டுமனை தகராறில் 7 பேர் மீது வழக்கு

திருக்கோவிலூர், அக். 16:திருக்கோவிலூர்  அருகே வி.சித்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மகன் குமார் (48).  இவருக்கும் அதே பகுதியில் உள்ள ஏழுமலை குடும்பத்திற்கும் இடையே வீட்டு மனை  தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 11ம் தேதி  குமார் அவரது வீட்டின் முன்பு நின்றிருந்தபோது, ஏழுமலை (45), இவரது மனைவி  உமா (40), மகன் ரகு (21), சேகர் (55), இவரது மனைவி டில்லி (45), மகன்கள்  செல்லதுரை (29), சுரேஷ் (23) உள்ளிட்ட 7 பேரும் சேர்ந்து குமாரை  தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த குமார் முண்டியம்பாக்கம் அரசு  மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து  அவர் அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சிறப்பு  எஸ்ஐ சிவானந்தம் மற்றும் போலீசார் ஏழுமலை உள்ளிட்ட 7 பேர் மீதும் வழக்கு  பதிவு செய்து செல்லதுரையை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Tags : persons ,house dispute ,Tirukovilur ,
× RELATED காணாமல் போனவர்களை கண்டறியும் சிறப்பு முகாம்