பெண்ணை தாக்கிய முதியவர் கைது

திண்டிவனம், அக். 16: திண்டிவனம் அடுத்த தீவனூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி மனைவி சூடிக்கொடுத்த சுடர்கொடி (49). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் நாராயணசாமி (68) என்பவர் தகாத வார்த்தைகளால் அசிங்கமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சூடிக்கொடுத்த சுடர்கொடி ரோசணை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags :
× RELATED கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது