×

பாரதிதாசன் மகளிர் கல்லூரி வளாகத்தில் சிமெண்ட் பெஞ்சுகள் அமைப்பு

புதுச்சேரி, அக். 16:   புதுவை முத்தியால்பேட்டையில் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பாடப்பிரிவுகளில் பிஎஸ்சி, எம்எஸ்சி, பி.ஏ., எம்ஏ., மற்றும் பி.எச்டி (மனையியல்) உள்ளன. அறிவியல் பிரிவுகள் காலையிலும், கலை பிரிவுகள் பிற்பகலிலும் என 2 ஷிப்டாக கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் மாணவிகள் அமர்ந்து படிக்கவும், சாப்பிடவும் போதிய இருக்கைகள் இல்லாததால் பெற்றோர் ஆசிரியர் சங்க நிதியில் சிமெண்ட் பெஞ்ச் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.80 ஆயிரம் செலவில் 20 சிமெண்ட் பெஞ்ச் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் கபாஸ் அலுவலகம் அருகே 10ம், நூலகம் அருகே 10ம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிமெண்ட் பெஞ்சுகளில் பாட நேரம் தவிர்த்து மாணவிகள் அமர்ந்து ஹாயாக அமர்ந்து பேசியும், படித்தும் வருகின்றனர்.

Tags : Organization ,campus ,Bharathidasan Ladies College ,
× RELATED டெல்லி ஜே.என்.யு. பல்கலை. மாணவர் அமைப்பு...