×

சிதம்பரத்தில் சாலையோரம் தேங்கி நிற்கும் கழிவுநீர்

சிதம்பரம், அக். 16: சிதம்பரம் நகரின் முக்கிய வீதிகளில் கழிவுநீர் ஆறாக ஓடுவதால் பொதுமக்களுக்கு ெதாற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. சிதம்பரம் தேரோடும் வீதிகளான சிதம்பரம் தெற்குவீதி மற்றும் மேலவீதி பகுதிகளில் நூற்றுக்கணக்கான வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளன. இந்த வீதிகள் வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த வீதிகளில் கடந்த சில தினங்களாக சாலையில் கழிவுநீர் ஓடுகிறது. மேலும் குளம்போல் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் கொசுக்கள் அதிகரித்து தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இச்சாலை வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் கழிவுநீரை வாரி இறைத்து செல்கின்றன. இதனால் பொதுமக்கள் அவதியுறுகின்றனர்.  நகராட்சி அலுவலர்களும் அவ்வபோது வந்து சாக்கடை அடைப்பை நீக்கி சரி செய்கிறார்கள். ஆனால் மீண்டும், மீண்டும் அப்பகுதிகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆகையால் நகராட்சி அதிகாரிகள் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படும் இடத்தை கண்டறிந்து கழிவுநீர் சாலையில் ஓடுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chidambaram ,
× RELATED சிதம்பரம் நாடாளுமன்ற ெதாகுதி தேர்தல் செலவின பார்வையாளர் நியமனம்