இளம்பெண் மாயம்

புவனகிரி, அக். 16: புவனகிரி அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் சந்திரன் (58). இவரது மகள் ஜனனி (21). கடந்த 13ம் தேதி ஜனனி வீட்டிலிருந்து கோயிலுக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் ஜனனியை காணவில்லை. பின்னர் இச்சம்பவம் குறித்து ரமேஷ் சந்திரன் புவனகிரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜனனியை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம்