×

அரசு அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது

பண்ருட்டி, அக். 16: பண்ருட்டி அருகே கீழ்கவரப்பட்டு கிராமத்தில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் வைத்து விற்பனை செய்வதாக பண்ருட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது புதுவை மாநில மதுபாட்டில்கள் வீட்டின் பின்புறம் வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு மதுபாட்டில் விற்பனை செய்துகொண்டிருந்த பிரபாகரன்(28) என்பவரை கைது செய்தனர். இதேபோல் பண்ருட்டி ராஜாஜி சாலையில் ரங்கா பில்டிங் முன்பு அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை செய்வதாக தகவல் வந்ததின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் தலைமையிலான போலீசார் சென்று அங்கு மதுபாட்டில் வைத்திருந்த சொரத்தூரை சேர்ந்த அன்பழகன்(51) என்பவரை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானக் கடைகள் நாளை விடுமுறை