×

தரமற்றதாக போடப்பட்டதால் தார்சாலை பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம்

திட்டக்குடி, அக். 16: திட்டக்குடி அருகே திருவட்டத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தரமற்ற நிலையில் போடப்பட்ட தார்சாலை பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. திட்டக்குடி அடுத்துள்ள திருவட்டத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2018-19 ம் ஆண்டுக்கான நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் திருவட்டத்துறையில் இருந்து கொடிக்களம் பஸ் நிறுத்தம் வரை 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த தார்சாலை தரமற்ற நிலையில் இருப்பதாக கூறிய அப்பகுதி மக்கள் நேற்று காலை தார்சாலை போடும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொறியாளர், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் இப்பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தார்சாலையானது தரமில்லாமல் அமைக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று அமைக்கப்பட்டால் விரைவில் தார்சாலையானது சேதமடைந்துவிடும்.
ஆகையால் தங்கள் பகுதியில் தரமான தார்சாலையாக அமைத்து தரவேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு பொறியாளர், தரமான சாலையாக அமைத்து தருவதாக உத்தரவாதம் அளித்ததன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : public ,
× RELATED புயல் எச்சரிக்கை நீங்கியதால் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்