×

ஆட்டையாம்பட்டியில் சாலையோரம் கிடைக்கும் கல்லால் விபத்து அபாயம்

ஆட்டையாம்பட்டி, அக். 16: ஆட்டையாம்பட்டி- ராசிபுரம் சாலையில் கான்கிரீட் கல் அகற்றப்படாததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. ஆட்டையாம்பட்டியில் இருந்து ராசிபுரம் செல்லும் சாலையில், சிறு மழை பெய்தாலும் கூட சாலையோரம் சாக்கடை கலந்த மழைநீர் ஆறாக ஓடியது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலையின் இருபுறமும் புதிதாக சாக்கடை கட்டப்பட்டது. இந்த பணியின் போது சாலையின் சந்து பகுதியில் இருந்த 10க்கும் பத்து அளவிலான பாலத்தை பெயர்த்து சாலையோரம் போட்டுவிட்டு, சாக்கடை பாலத்தை கட்டினர்.திட்டப்பணிகள் முடிந்து 10 மாதங்கள் ஆகியும், இதுநாள் வரை சாலையோரம் போடப்பட்ட கான்கிரீட் கல்லை அகற்றவில்லை. இதனால் சாலையில் டூவீலரில் வருபவர்கள், கனரக வாகனங்களுக்கு ஒதுங்கும்போது விபத்தில் சிக்குகின்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், கான்கிரீட் கல்லை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags : Road accidents ,Adayampatti road ,
× RELATED தமிழ்நாட்டில் சாலை விபத்து தடுக்க...