×

அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கெங்கவல்லி, அக். 16: கெங்கவல்லி அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், கடந்த1999 -2001ம் ஆண்டு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு  கெங்கவல்லி அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் உத்திரபுத்திரன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்வர்கள் கிருஷ்ணன், முத்துசாமி, ராதா ருக்மணி, மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர்கள், தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களிடம் வாழ்த்துபெற்றனர். 18 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த நண்பர்கள், தங்களது பழைய நிகழ்வுகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு, மாணவர்கள் நினைவு பரிசுகள் கவுரவித்தனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். விழாவில் முன்னாள் ஆசிரியர்கள் வெங்கட்ராமன், மனோகர், சிவாஜி உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.  விழாவை ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் மணிகண்டன், செல்வராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Alumni Meeting ,Government Teacher Training Institute ,
× RELATED கலசலிங்கம் பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி