×

கடம்பூர் அரசு பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி

கெங்கவல்லி,  அக். 16: கெங்கவல்லி அருகே உள்ள கடம்பூரில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி  சார்பில், டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணிக்கு பள்ளியின்  தலைமை ஆசிரியர் செல்வம் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழுவின்  மீனாம்பிகா, டெங்கு விழிப்பணர்வு பேரணியை  கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக  டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. டெங்குவை  ஒழித்திடுவோம், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்வோம், கைகளை அடிக்கடி  கழுவிடுவோம், தண்ணீர் தொட்டிகள், தண்ணீர் பிடித்து வைத்துள்ள பாத்திரங்களை  மூடிவைப்போம் போன்ற  வாசகங்கள் எழுதிய பதாகைகளை மாணவர்கள் ஏந்தியபடி  பேரணியாaக சென்றனர்.
பொதுமக்களிடம் டெங்கு விழிப்புணர்வு துண்டு  பிரசுரங்களை வழங்கினர். இந்த பேரணியில் பள்ளி ஆசிரியைகள், பள்ளி மேலாண்மை  குழுவினர் பங்கேற்றனர்.

Tags : Dengue awareness rally ,Kadambur Government School ,
× RELATED கடம்பூர் அரசு பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா