×

கைது செய்யக்கோரி சீமான் மீது ஓமலூர் போலீசில் காங்கிரஸ் கட்சியினர் புகார்


ஓமலூர்,  அக். 16: நாம் தமிழர் கட்சி சீமான் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்து  கைது செய்யக்கோரி, ஓமலூர் காவல் நிலையத்தில், காங்கிரஸ் கட்சியினர் நேற்று  புகார் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் காவல் நிலையத்தில்  காங்கிரஸ் கட்சி சார்பில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ்  கமிட்டி தலைவர் முருகன் தலைமையில் துணைத்தலைவர் சந்திரசேகரன், வட்டார  தலைவர் சக்திவேல், நிர்வாகிகள் கணேசன், மாரியப்பன், மணி, வேலு மற்றும்  காங்கிரசார், அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 13ம் தேதி  விக்கிரவாண்டி தொகுதியில் நடந்த நாம் தமிழர் கட்சியின் பிரசார  பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜீவ்காந்தி  மரணம் குறித்து கருத்து தெரிவித்தார். எனவே, ராஜீவ் காந்தி கொலை வழக்கில்  சிறையில் உள்ள 7 நபர்களோடு சீமானின் பெயரையும் சேர்க்க வேண்டும். மேலும்,  சீமானின் பேச்சு, மக்கள் மத்தியில் வன்முறையை தூண்டும் வகையிலும், தேசிய  ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. எனவே சீமான்  மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்ய  வேண்டும். அவரது கட்சியை தடைசெய்ய வேண்டும் என புகாரில்  தெரிவித்துள்ளனர்.  இந்த புகாரை பெற்றுக்கொண்ட ஓமலூர் இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த், உயர்  அதிகாரிகளிடம்  ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுப்பதாக கூறி, அவர்களை அனுப்பி  வைத்தார்.


Tags : policemen ,Omanoor ,Seeman ,arrest ,
× RELATED ராமநாதபுரத்தில் காவலர்களுக்கு சமூக இடைவெளியுடன் யோகா பயிற்சி