×

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பம்

சேலம், அக்.16: சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள ெதாழிற்சாலைகளின் உரிமத்தை புதுப்பிக்க, வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் புகழேந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம், சேலம் தெற்கு, சேலம் மேற்கு, ஏற்காடு, மேட்டூர், சங்ககிரி, இடைப்பாடி வட்டங்கள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், அடுத்த 2020ம் ஆண்டிற்கு தங்களது தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை வரும் 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். உரிமத்தை புதுப்பிக்க இந்த துறையின் இணையதளத்தில் விண்ணப்ப படிவம்-2ல் உள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்ததை பதிவிறக்கம் செய்து, கையொப்பமிட்டு உரிமத்ெதாகைக்கான தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் டிடி உடன் இணைத்து அனுப்ப வேண்டும். இந்த விண்ணப்பங்கள், சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அலுவலகத்திற்கு வரும் 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தவறும்பட்சத்தில் நவம்பர் மாதம் விண்ணப்பம் அனுப்பினால் உரிமக்கட்டணத்துடன் 10 சதவீத தாமத கட்டணமும், டிசம்பசர் மாதம் 20 சதவீத தாமதக்கட்டணமும், அதற்கு பின்னர் 30 சதவீத தாமதக்கட்டணமும் செலுத்த வேண்டும். எனவே, தொழிற்சாலை உரிமையாளர்கள் இந்த மாத இறுதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து, பின்னர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Namakkal District ,Salem ,
× RELATED பயிற்சி வகுப்பில் தூங்கி வழிந்த அலுவலர்கள்