×

நாமக்கல்லில் அஞ்சலக ஓய்வூதியர்கள் தர்ணா

நாமக்கல், அக். 16: நாமக்கல்லில் அஞ்சல கண்காணிப்பாளர் அலுவலகம் முன், அகில இந்திய அஞ்சல் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.
 இதற்கு மாவட்ட தலைவர் மணியாரன் தலைமை வகித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்புபடி ஜூன் 30ல் ஓய்வு பெற்ற அனைவருக்கும் ஊக்க ஊதியம் அளிக்க வேண்டும். மருந்துகளை விரைவு தபால் மூலம் ஓய்வூதியர்களுக்கு அனுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Post pensioners ,Namakkal ,
× RELATED நாமக்கல் டேங்கர் லாரி அதிபர்...