×

நாமக்கல்லில் மண்வள மேம்பாட்டு முறைகள் குறித்து இலவச பயிற்சி முகாம்

நாமக்கல்,அக்.16: நாமக்கல்லில், வரும் 22ம் தேதி மண்வள மேம்பாட்டு முறைகள் குறித்து இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது. நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், வரும் 22ம் தேதி காலை 9 மணிக்கு, மண்வள மேம்பாட்டு முறைகள் என்ற தலைப்பில், ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.   இப்பயிற்சி முகாமில் மண் பரிசோதனையின் அவசியம், மண் மாதிரி சேகரிக்கும் முறைகள், மண்வள மேம்பாட்டு உத்திகள், ஒருங்கிணைந்த முறையில் மண்வள மேம்பாடு (சமச்சீரான ஊட்டச்சத்து இடும்முறை - இயற்கை எருக்கள் அளிக்கும் முறைகள், ரசாயன உரங்களை பயன்படுத்தும் முறைகள் மற்றும் உயிர் உரங்களின் பயன்பாடுகள்) குறித்து விரிவாக கற்றுத் தரப்பகிறது. இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள், நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தலைவர் அகிலா தெரிவித்துள்ளார்.

Tags : Training Camp ,Namakkal ,
× RELATED நாமக்கல் பகுதியில் கோழிப்பண்ணைகளில்...