×

கடத்தூர் பகுதியில் மக்காச்சோளத்தில் படைப்புழு

கடத்தூர், ஆக.16: கடத்தூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோள பயிரில் படை புழு தாக்கம் அதிகரித்தால், இதை தடுக்க ேவளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என விவசாயிக்ள கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான ஒடசல்பட்டி, சில்லரஹல்லி, நத்தமேடு, புட்டிரெட்டிப்பட்டி தாளநத்தம், ராமாயணஅல்லி, சிந்தல்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளில், சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல், விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர். நடப்பாண்டு நல்ல மழை பெய்ததால், பயிர்கள் செழித்து வளர்ந்துள்ளது. ஆனால் கதிர் பிடிக்கும் நிலையில், மக்காச்சோளத்தில் படைபுழு தாக்கம் அதிகரித்து கதிர்கள் அனைத்து வீனாகி வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 2ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால்,  விவசாயம் செய்யவில்லை. நடப்பாண்டு பெய்த மழையால், பருத்தி, நெல், சோளம், ராகி, கம்பு உள்ளிட்ட பயிர் வகைகளை நடவு செய்தோம். தற்போது மக்காசோள பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்தோம். இந்நிலையில் மக்காச்சோளத்தில் படை புழுக்களின் தாக்கம் அதிகரித்தால், பயிர்கள் அனைத்தும் வீனாகிவிட்டது. ஏக்கருக்கு ₹20ஆயிரம் வரை செலவு செய்தும், லாபம் ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளை, வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க ேவண்டும் என்றனர்.

Tags : Kadathur ,region ,
× RELATED இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்!