×

பாரத் இண்டர்நேஷனல் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி

கிருஷ்ணகிரி, அக்.16: கிருஷ்ணகிரி அருகே சென்னை சாலையில் சுபேதார்மேட்டில் இயங்கி வரும் பாரத் இண்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில், மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி துவக்கி வைத்தார். பள்ளி நிறுவனர் மணி வரவேற்றார். கிருஷ்ணகிரி  மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இப்போட்டியில் கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை, ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, ராயக்கோட்டை உள்ளிட்ட சரக அளவிலான மாணவ, மாணவிகள் 170க்கும் மேற்பட்டோர் 11,14,17 மற்றும்19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். மேலும் கடந்த ஆண்டு மாநில அளவிலான சதுரங்கபோட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை  ஊக்குவிக்கும் விதமாக 14 வயது பிரிவில் வீரமலைபுவரசன், பானுமதி, பவித்ரா மற்றும் 17 வயது பிரிவில் கார்த்திக் ஆகியோருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, புத்தகம் வழங்கி பாராட்டினார். போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags : chess competition ,Bharat International School ,
× RELATED சாம்பியன்சிப் செஸ் போட்டி