×

காரிமங்கலம் பகுதியில் காய்கறிகள் விலை வீழ்ச்சி

காரிமங்கலம், அக்.16: காரிமங்கலம் அருகே விலை வீழ்ச்சி காரணமாக சாலையோர குப்பையில் புடலங்காய், சுரைக்காய்களை விவசாயிகள் கொட்டி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. காரிமங்கலம் சுற்றுவட்டாரங்களில் விவசாயத்தில் காய்கறிகள் முக்கிய சாகுபடியாக இருந்து வருகிறது. இப்பகுதிகளில் முள்ளங்கி, வெண்டைக்காய், பாகற்காய், கத்திரிக்காய், புடலங்காய், சுரைக்காய் அதிகளவில் விளைக்கப்படுகிறது. இவை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. காரிமங்கலம் அடுத்த பந்தாரஅள்ளி, மண்ணாடிப்பட்டி, பண்ணந்தூர், பாப்பாரப்பட்டி ஆகிய பகுதிகளில் புடலங்காய், சுரைக்காய் போன்றவை அதிகளவில் விளைவிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் விற்ற விலையை விட தற்போது மேலும் காய்கறிகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. புடலங்காய் கொள்முதல் விலை கிலோ 4க்கும் சுரைக்காய் கொள்முதல் விலை கிலோ ₹1க்கும் விலை போனதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்து, சுரைக்காய் மற்றும் புடலங்காய் போன்றவற்றை சாலையோரமும், குப்பைகளிலும் கொட்டி சென்றனர். காரிமங்கலத்தில் வறட்சியால் விவசாயிகள் தண்ணீரில்லாமல், விவசாயம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மிகுந்த சிரமத்துடன் காய்கறிகளை உற்பத்தி செய்து வருகின்றனர். இந்நிலையில் விளைந்த காய்கறிகள், விலை வீழ்ச்சியடைந்து இருப்பது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : Karimangalam ,region ,
× RELATED மாம்பழ கடைகளை அமைத்த வியாபாரிகள்