×

சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை உறுப்பினர்கள் சான்றிதழ் சமர்ப்பிக்க அழைப்பு

தர்மபுரி, அக்.16: சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் உறுப்பினர்களுக்கு பங்கு ஆதாயம் வழங்கப்பட உள்ளதால், உறுப்பினர்கள் பங்கு சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநர் அஜய் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை 2017-18ம் தணிக்கையாண்டில் நிகர லாபம் ஈட்டியுள்ளது. 31.3.2018ம் தேதியில் ஆலையின் அங்கத்தினர்களாக உள்ள அனைவருக்கும் பங்கு ஆதாயம் வழங்கப்பட உள்ளது. எனவே அனைத்து அங்கத்தினர்களும் தங்களது பங்கு சான்று, தங்கள் வங்கியின் பெயர், வங்கி கணக்கு எண், வங்கி  அமைந்துள்ள ஊர், வங்கியின் ஐஎப்எஸ்சி எண் ஆகியவற்றை ஒளி நகலாகவும் மற்றும் தங்களின் தொலைபேசி அல்லது கைபேசி எண்ணையும் அருகில் உள்ள ஏதேனும் ஒரு கோட்ட கரும்பு அலுவலகத்தில் வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Subramanian Siva Co-operative Sugar Factory ,
× RELATED புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதி...