×

டேபிள் டென்னிஸ் போட்டி கோல்டன் கேட்ஸ் பள்ளி மாணவன் சாதனை

பாப்பிரெட்டிப்பட்டி, அக்.16: இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் சார்பில், ஏற்காடு மாண்ட்போர்டு பள்ளியில்,  மண்டல அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில், பையர் நத்தம் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவன் சந்தீப், 2ம் இடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் மதுரையில் நடைபெறும், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
   வெற்றி பெற்ற மாணவனுக்கு பள்ளி நிர்வாகத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Table Tennis Tournament ,Golden Gates School Student Achievement ,
× RELATED மாநில டேபிள் டென்னிஸ் போட்டி: பட்டிவீரன்பட்டி மாணவர்கள் சாதனை