×

திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்

திருக்கழுக்குன்றம், அக். 16: திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில், டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், 54  ஊராட்சிகளிலும் உள்ள, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை நன்றாக  சுத்தம் செய்து குளோரின் பவுடர் போடப்பட்டது. மேலும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு அடியில் உள்ள புதர்களை அகற்றி சுத்தம் செய்யப்பட்டுள்ளன. அந்தந்த ஊராட்சிகளில் உள்ள சாலைகளை சுத்தம் செய்து, குப்பைகளை அகற்றுவது என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகிறது.

Tags : Union ,Tamil Nadu ,
× RELATED “தமிழ்நாடு என்னை மிகவும் கவர்ந்த...