பஸ் மோதி போலீஸ்காரர் இறந்த வழக்கு டிரைவருக்கு ஓராண்டு சிறை

காஞ்சிபுரம், அக்.16: தக்கோலம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்தவர் ரவிக்குமார் (40). கடந்த 2014ம் ஆண்டு, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை கூரம் கேட் பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு ரவிக்குமார், தனியார் பஸ் மோதி இறந்தார்.
இதுதொடர்பாக பாலுசெட்டிச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  இந்த வழக்கு காஞ்சிபுரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் விசாரணை முடிவடைந்து குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நேற்று முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி பிரியா தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் கூறியிருப்பதாவது, விபத்து ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஞானப்பிரகாசத்துக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையுடன், ₹1,500 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் காமேஷ்குமார் வாதாடினார்.

Tags : death ,
× RELATED கரூரில் லோக் அதாலத் பாதியில் இறக்கி...