×

கல்வி மாவட்டம் சார்பில் அறிவியல் கண்காட்சி

பெரும்புதூர், அக். 16: பெரும்புதூர் கல்வி மாவட்டம் சார்பில் 47வது ஜவகர்லால் நேரு அறிவியல் கண்காட்சி, பெரும்புதூர் ஒன்றியம் வல்லம் ஊராட்சிக்கு உட்பட்ட தெரசாபுரம் அரசு உதவி பெறும் சிறுமலர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.
பள்ளி முதல்வர் ஜேசுராஜ் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் விமலாதேவி தர்மா முன்னிலை வகித்தார். பெரும்புதூர் கல்வி மாவட்ட அலுவலர் மதிவாணன் கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்தார்.பெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த அரசு பள்ளி, அரசினர் உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டன. முன்னதாக பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடந்தன.

Tags : Science Exhibition ,Education District ,
× RELATED புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்...