×

ஊத்துக்கோட்டை அரசு பள்ளியில் இயற்பியல் துறை விஞ்ஞானிகள் கண்காட்சி

ஊத்துக்கோட்டை, அக். 16: ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாளில் இயற்பியல் துறை சார்பில் விஞ்ஞானிகள் பற்றிய  கண்காட்சி நடைபெற்றது. இதில், மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது படைப்புகளை காட்சிக்கு வைத்தனர். ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் டாக்டர் ஏபிஜெ.அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு இயற்பியல் துறையின் சார்பில் விஞ்ஞானிகள் பற்றிய  கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பள்ளியின் தலைமையாசிரியர் சுரேஷ் தலைமை தாங்கினார்.பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் கோ.சீனிவாசன், ஆசிரியர்கள் சற்குணா, பூபாலன், பாண்டியன், சப் - இன்ஸ்பெக்டர் மணிமனோகரன், வக்கீல் வேல்முருகன்  ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.
ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன், கண்காட்சியை திறந்து வைத்து, மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டு, விஞ்ஞானிகள் குறித்து  கேட்டறிந்தார்.  மேலும், விஞ்ஞானிகளான அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை, சிவன், கல்பனா சாவ்லா, ஐசக் நியூட்டன் மற்றும் ஜிடி நாயுடு என இயற்பியல் துறையை சேர்ந்த இந்திய மற்றும் உலக விஞ்ஞானிகள் 23 பேர்  குறித்தும் அவர்களின் சாதனைகள் குறித்தும்  விளக்கப்படம் வைக்கப்பட்டது. இந்த கண்காட்சியை இப்பள்ளியில் படிக்கும் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பார்வையிட்டனர். மேலும், இந்த கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் பரிசு, பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Tags : Physics Dept. Exhibition ,Uthukkottai Government School ,
× RELATED புழல் சுற்றுவட்டார சாலைகளில்...