×

ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரில் இடிந்து விழும் ஆபத்தில் அங்கன்வாடி கட்டிடம்


ஊத்துக்கோட்டை, அக். 16: ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரில்   பழுதடைந்து பயன்படாமல் கிடக்கும் அங்கன்வாடி மையத்தில் விஷப்பூச்சிகள் உலாவுகின்றன. இதை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.     
ஊத்துக்கோட்டை  பேரூராட்சி, அம்பேத்கர் நகர் பகுதியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இதில், அதே பகுதியை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர். இவர்கள், படித்து வரும் அங்கன்வாடி மைய கட்டிடம் மிகவும் பழுதடைந்தும்  மேற்கூரைகள் சேதமடைந்தும், சுவர்களில் விரிசல் அடைந்தும் உள்ளது. மேலும் கூரையில் செடி, கொடிகள் மற்றும் மரங்கள் வளர்ந்துள்ளன. வளாகத்தை சுற்றி புதர்கள் மண்டிக் கிடக்கிறது.  தற்போது அதே பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது.

மேலும், பழைய கட்டிடத்தின் பக்கத்திலேயே அரசு நடுநிலைப்பள்ளியும் உள்ளது. இந்த பழுதடைந்த  அங்கன்வாடி மையத்தில் இருந்து பாம்பு, தேள் விஷப்பூச்சிகள் நடுநிலைப்பள்ளிகளுக்குள் செல்கிறது. எனவே, பயன்படாமல் உள்ள அங்கன்வாடி மையத்தை அகற்றி புதிதாக கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்து பயன்படாமல் உள்ளது.  இதனால், அருகில் உள்ள மகளிர் உயஉதவிக்குழு கட்டிடத்தில் கடந்த 2 வருடமாக மாணவர்கள்  படித்து வருகிறார்கள்.  எனவே, பழுடைந்து கிடக்கும் அங்கன்வாடி மையத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டவேண்டும்’ என கூறினர்.

Tags : building ,Ambedkar ,
× RELATED கட்டிட உரிமையாளர்களுக்கு செக் வைக்க ரெஸ்டாரண்ட்களிடையே புதிய ஒப்பந்தம்