×

வாய்க்கால் மீது கட்டிடம் கட்டும் விவகாரம் சாலை மறியலுக்கு உடந்தையாக இருந்ததாக 2 பேர் திடீர் கைது

பொன்னேரி, அக். 16: தடப்பெரும்பாக்கத்தில் வாய்க்கால் அடைத்து கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் இருந்து மழைகாலங்களில் வெள்ள நீரும், குளம், குட்டைகளில் உள்ள உபரிநீரும் வெளியேற ஓடை வாய்க்கால் உள்ளது.இதை சிலர் ஆக்கிரமித்து, வணிக வளாகம் கட்டும் நோக்கில் சுற்றுசுவர் கட்டும் பணிகளை துவக்கினர். இதுகுறித்து தகவலறிந்ததும் ஓடை வாய்க்காலை அடைத்து மழைநீரை தடுக்கும் கட்டுமானப் பணிகளை கைவிடக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு அதிகாரிகளின் சமரசத்தினால் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் அங்கு கட்டுமான பணிகளை தொடரக்கூடாது என அதிகாரிகள் தரப்பில் நிபந்தனையும் வைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஓடை வாய்க்காலை அடைத்து  கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் ேநற்று முன்தினம் நடைபெற்றன. இதை அறிந்ததும் அப்பகுதி மக்கள் விரைந்து வந்து, அங்கு கட்டிடம் கட்டுவதற்காக தயார் நிலையில் வைத்திருந்த பொருட்களை விசிறி எறிந்தனர். சாலையின் குறுக்கே இரும்பு கம்பிகளை போட்டு வாகனங்களை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து தகவலறிந்ததும் பொன்னேரி போலீசார் வந்தனர். மேலும், இந்த சாலை மறியல் நடத்த உடந்தையாக இருந்ததாக கூறப்படும் திருவேங்கடபுரத்தை சேர்ந்த பாலாஜி (42), மதன் (30) ஆகிய இருவரையும்  கைது செய்தனர். அவர்கள்மீது அவதூறாக பேசுதல், கையால் அடித்தல், கொலை மிரட்டல் விடுத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : persons ,
× RELATED இ-சேவை மையத்தை கண்டித்து அமைப்புசாரா தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்