×

ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கடத்தி வந்து மாணவர்களுக்கு போதை சாக்லெட் விற்ற வடமாநில வாலிபர்கள் கைது

சென்னை: ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் போதை சாக்லெட் கடத்தி வந்து சென்னை முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த 2 வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
 ஒடிசா மாநிலத்தில் இருந்து நேற்று எழும்பூர் ரயில் நிலையம் வந்த ஹவுரா விரைவு ரயிலில், 2 வட மாநில இளைஞர்கள் சென்னை வந்தனர். எழும்பூர் போலீசார் சந்தேகத்தின் பேரில், அவர்களை பிடித்து, அவர்களின் உடமைகளை சோதனை செய்தபோது, அதில், போதை சாக்லெட்கள், ஹான்ஸ் பாக்கெட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது தெரியவந்தது. உடனே, போலீசார், அவர்கள் 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து ெசன்று விசாரணை நடத்தினர். அதில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் பிரதான் (26) மற்றும் ருத்து ஹேம்ராம் (18) என்றும், இருவரும் பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

இவர்கள் ஒவ்வொரு மாதமும் சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு சென்று போதை சாக்லெட் மொத்தமாக வாங்கி வந்து பெங்குடியில் உள்ள அறையில் வைத்து சென்னையில் எழும்பூர், திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.  இதையடுத்து போலீசார், 2 வடமாநில வாலிபர்களையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள போதை சாக்லெட் மற்றும் ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : North Indian ,state youth ,
× RELATED கடலூரில் தேர்தல் தகராறில் பெண் கொலை...