×

டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசுக்கள் வீடு, திறந்தவெளி, கட்டுமான இடங்களில் கொசு உற்பத்தியானால் 2 மடங்கு அபராதம்: மாநகராட்சி அதிரடி உத்தரவு

சென்னை: டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் இருக்கும் திறந்தவெளி நிலங்களை மாநகராட்சி சுத்தப்படுத்தினால் அதற்காக 2 மடங்கு கட்டணம் அபரதாகமாக வசூலிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.  டெங்கு காய்ச்சலின் பாதிப்பு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.  பாதிக்கப்பட்டவார்கள் ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. டெங்கு தாக்கம் இருப்பவர்கள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.  இதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 500க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்றுவருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் ஆய்வு கூட்டம்  நடந்தது. இதில் மாநகராட்சி சுகாதாரத்துறை துறை ஆணையர் மதுசுதன் ரெட்டி, மத்திய வட்டார துறை ஆணையர்தர், வடக்கு வட்டார துணை ஆணையர் ஆகாஷ், மாநகர நல அலுவலர் செந்தில்நாதன், கூடுதல் மாநகர நல அலுவலர்கள், மண்டல நல அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சென்னை மாநகராட்சி பகுதியில் 6,913 பூட்டிய வீடுகளும், 25,287 திறந்தவெளி இடங்களும் 7,661 கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ெகாசு உற்பத்திக்கு காரணமான நிறுவனங்களுக்கு இதுவரை 38 லட்சத்து 96 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து கொசு உற்பத்தியாகும் நிலையில் உள்ள காலியிடங்களை சுத்தப்படுத்த, சம்பந்தப்பட்ட நில உரிமையாளருக்கு அறிவுறுத்த வேண்டும். அவர் சுத்தப்படுத்தாவிட்டால் மாநகராட்சி சார்பில் சுத்தப்படுத்தி அதற்கு வழக்கமாக மாநகராட்சி தரப்பில் வசூலிக்கப்படுவதை விட 2 மடங்கு கட்டணம் அபராதமாக வசூலிக்க வேண்டும் என்று ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டார். மேலும் வீடுகள், கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் கொசு உற்பத்தி ஆவது தெரிந்தால், கடும் அபராதம் விதிக்க வேண்டும். பூட்டி உள்ள வீடுகளை கண்டறிந்து அவற்றை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மாணவர்களுக்கு 5 நாள் நிலவேம்பு
குடிநீர் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக ஏற்கனவே சென்னையிலுள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மீண்டும் ஒரு முறை 5 நாட்கள் தொடர்ந்து நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளார்.

Tags : home ,space ,
× RELATED உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம்...