×

சிறுமியிடம் சில்மிஷம் கொத்தனார் கைது

துரைப்பாக்கம்: செம்மஞ்சேரியில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கொத்தனாரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (36), கொத்தனார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியிடம், செல்போனில் ஆபாச படம் காட்டி, சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.  இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் மகேந்திரனை பிடித்து அடித்து உதைத்து செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் கொத்தனாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED ஊரணியில் மூழ்கி சிறுமி பலி