×

அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா

பொன்னமராவதி, அக்.16: பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியில் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப்பட திறப்பு விழா, வேந்தன்பட்டி ஜோசப்பள்ளியில் ரத்ததான முகாம், மரக்கன்று நடும் விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. பொன்னமராவதி சைன் லயன்ஸ் சங்கத் தலைவர் சோலையப்பன் தலைமை வகித்தார். வட்டார தலைவர் அன்புச்செல்வன், மேலைச்சிவபுரி மருத்துவ அலுவலர் அருண்குமார், பள்ளி தாளாளர் ஜோசப் சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர் மாணிக்கவேல், காரையூர் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி அலுவலர் ரமேஷ் ஆகியோர் விழாவினை துவக்கி வைத்து பேசினர். இவ்விழாவில் பள்ளி வளாகத்தில் அம்மரக்கன்றுகள் நடப்பட்டது. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு குறித்த கண்காட்சியும் நடந்தது.

விழாவில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள், நிர்வாக அலுவலர் தர்மராஜ், முன்னதாக பள்ளி முதல்வர் அமலா ஜோசப் வரவேற்றார். முடிவில் சங்க பொருளாளர் ராஜா நன்றி கூறினார். பொன்னமராவதி சைன் லயன்ஸ் சங்கம் மற்றும் மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து இந்த விழாவை நடத்தினர். இதேபோல கண்டியாநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளித் தலைமையாசிரியர் வெண்ணிலா தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் ஆசிரியர்கள் சத்யா, கலைச்செல்வி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Abdul Kalam ,Government School ,Birthday Ceremony ,
× RELATED ராமநாதபுரத்தில் விமான நிலையம் நவாஸ்கனி எம்பி தேர்தல் அறிக்கை வெளியீடு