×

கறம்பக்குடி அருகே வன காப்பாளரை தாக்கிய 3 பேருக்கு வலை

கறம்பக்குடி, அக்.16: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே நம்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தராஜன் (43). இவர் வாராப்பூர் வன தோட்ட கழகத்தில் காப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம் போல வன பகுதிகளை சுற்றி பார்த்து விட்டு மாலை வாறாப்பூர், மலையூர், நம்பப்பட்டி வழியாக ஆலங்குடிக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது கீழ புலவங்காடு கிராமத்தை சேர்ந்த நாகராஜன் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேர், கீழ மஞ்சக்கரை அக்னி ஆறு அருகே அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர். அந்த வழியாக வந்த சவுந்தராஜனை வழி மறித்து தகாத வார்த்தையில் பேசி தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த வனக்காப்பாளர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜன் உள்ளிட்ட மூன்று பேரை தேடி வருகிறார்கள்.

Tags : persons ,Karambakkudi ,
× RELATED திருவள்ளூரில் புதிதாக இன்று 36 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி