×

41 பள்ளிகள் பங்கேற்பு ஆலங்குடி, கறம்பகுடி தாலுகாவில் மேலும் 5 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

புதுக்கோட்டை, அக்.16:பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் காரீப் கொள்முதல் பருவம் 2019-20 தொடங்கி உள்ளதால், விவசாயிகள் அதிகம் பயன்பெறும் வகையில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய ஏதுவாக ஆலங்குடி தாலுகாவில் ஆலங்குடி, கறம்பக்குடி தாலுகாவில் ரெகுநாதபுரம், புதுப்பட்டி, கந்தர்வகோட்டை தாலுகாவில் தெத்துவாசல்பட்டி, வெள்ளாளவிடுதி ஆகிய 5 இடங்கில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த 14ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆலங்குடி தாலுகாவில் வடகாடு, கறம்பக்குடி தாலுகாவில் பாப்பாபட்டி, மழையூர், கந்தர்வகோட்டை தாலுகாவில் குளத்துநாயக்கன்பட்டி, வீரப்பட்டி ஆகிய 5 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று (புதன்) முதல் திறக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே, விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லினை தங்கள் கிராமங்களுக்கு அருகில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன் பெறலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : schools ,
× RELATED 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான...