×

சாத்தான்குளம் அருகே ஆசீர்வாதபுரம் பள்ளியில் விளையாட்டு விழா

சாத்தான்குளம், அக். 16: சாத்தான்குளம் அருகே  ஆசீர்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. தலைமை வகித்த ஆசீர்வாதபுரம் சேகரகுரு தாமஸ் ரவிக்குமார், ஜெபித்து விழாவைத் துவக்கிவைத்தார். பள்ளித் தாளாளர் வக்கீல் தியோனிஸ் சசிமார்சன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் மாணிக்கம் வரவேற்றார். சாத்தான்குளம் டிஎஸ்டி பால்துரை  விளையாட்டுப் போட்டிகளைத் துவக்கி வைத்தார். இதில் சாத்தான்குளம் சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், உடன்குடி தொழிலதிபர் விஜேந்திரராஜ் வாழ்த்திப் பேசினர். போட்டிகளி பச்சைநிற அணியினர் முதலிடமும், மஞ்சள் நிற அணியினர் 2ம் இடமும் வென்றனர்.

பேய்க்குளம் சித்திரைசேகர் மற்றும் புனித லூக்கா இல்ல  முன்னாள் மாணவர்கள், வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள்  வழங்கினர்.  பள்ளி ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் அன்பு ஜெயபாக்கியம், பேய்க்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இம்மானுவேல், ஆசிரியர் சுவாமிதாஸ் ஜெயசீலன் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் விழாவில் பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர் சாமுவேல்பொன்னையா நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் தலைமையில் தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் செய்திருந்தனர். 

Tags : Sports Festival ,Blessedipuram School ,Sathankulam ,
× RELATED சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதாகி...