×

போப் பொறியியல் கல்லூரியில் மாணவர் மன்றம் துவக்க விழா

ஏரல், அக். 16: சாயர் புரம் போப் பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மிண்ணணுவியல் துறையின் ‘ஆம்ப்ஸ் 2019’ மாணவர் மன்றத் துவக்க விழா நடந்தது. தலைமை வகித்த கல்லூரித் தாளாளர் ராஜேஷ் ரவிசந்தர், மாணவர் மன்றத்தை துவக்கிவைத்துப் பேசினார். துறைத்தலைவர் ஆனந்தி வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜாபிந்த், மாணவர் ஒருங்கிணைப்பு அமைப்பின் முக்கியத்துவத்தை எடுத்து கூறினார். ஸ்பிக் துணை மேலாளர் முன்னாள் மாணவர் ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மாணவ, மாணவிகளுக்கு தொழில்நுட்ப கருத்தரங்கு மற்றும் தொழில்நுட்ப வினா-விடை நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர் மன்ற அமைப்பின் செயலாளர் வசந்த்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் எஸ்தர் ராஜாத்தி, துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.

Tags : Student forum opening ceremony ,Pope Engineering College ,
× RELATED தூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி