×

சீமானை கைது செய்ய கோரி கோவில்பட்டியில் காங்கிரஸ் தர்ணா

கோவில்பட்டி, அக். 16: ராஜிவ் காந்தி படுகொலை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கைதுசெய்ய வலியுறுத்தி கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் காங்கிரசார் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையொட்டி வடக்கு மாவட்ட துணைத்தலைவரான வக்கீல் அய்யலுசாமி  தலைமையில் கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரசார், தங்கள் முகம்  முழுவதும் கருப்பு துணியை அணிந்தவண்ணம் அலுவலக வாயில் முன்பு பாய்  விரித்து படுத்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் ஆர்டிஓ விஜயாவிடம் மனு அளித்து சென்றனர். இதில் முன்னாள் மாவட்டச் செயலாளர் காமராஜ், நகரத் தலைவர் சண்முகராஜா மாவட்ட பொருளாளர் முத்து, ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags : dharna ,Congress ,arrest ,Kovilpatti ,Seeman ,
× RELATED வேடசந்தூர் ஸ்டேஷன் முன்பு தர்ணா