×

குமரியில் ஆசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி தொடக்கம் சிஇஓ தொடங்கி வைத்தார்

நாகர்கோவில், அக்.16:  நாகர்கோவிலில் ஆசிரியர்களுக்கு ஐந்து நாள் பயிற்சி வகுப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் தொடங்கி வைத்தார்.  ஒருங்கிணைந்த கல்வி மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முழு மேம்பாட்டிற்கு தேசிய அளவிலான முன்னெடுப்பு பயிற்சி 5 நாள் ஒருங்கிணைந்த பயிற்சியாக நாகர்கோவில் டதி பெண்கள் மேல்நிலை பள்ளியில் தொடங்கியது, முதன்மைக்கல்வி அலுவலர் ராமன் பயிற்சியினை தொடங்கி வைத்து பயிற்சியின் முக்கியத்துவத்தையும் அதனை வகுப்பறையில் சிறந்த முறையில் செயல்படுத்தவும் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இப்பயிற்சி முதல் கட்டமாக தோவாளை, அகஸ்தீஸ்வரம் மற்றும் ராஜாக்கமங்கலம் வட்டார வளமையத்திற்கு உட்பட்ட உயர் தொடக்க நிலை தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 156 பேருக்கு அளிக்கப்படுகிறது. பயிற்சியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் தங்கள் வருகையினையும் பயிற்சியில் பெற்ற அனுபவத்தினையும் ஆண்டிராய்ட் செல்போன் மூலம் பதிவு செய்தனர்.

பயிற்சியில் ஒருங்கிணைந்த கல்வி உதவி திட்ட அலுவலர் பாக்கியசீலன், பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு கருத்துரை வழங்கினார். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஜூனா ஜேம்ஸ், நாகர்கோவில் கல்வி மாவட்ட அலுவலர் மோகனன், டதி மேல்நிலைப்பள்ளி முதல்வர் நிர்மலா சாந்தகுமாரி, சுசீந்திரம் வட்டார கல்வி அலுவலர் சோபனகுமார் மற்றும் கருத்தாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜன் நன்றி கூறினார். பயிற்சி ஏற்பாட்டினை மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் தயாளன் செய்திருந்தார்.

Tags : CEO ,Kumari ,teachers ,
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...