×

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் கடை கோடியான தமிழகத்திற்கு பலன் கிடைக்குமா? முதல்வர் நிபுணர்களுடன் கலந்தாலோசிக்க வலியுறுத்தல்

திருச்சி, அக்.15: கோதாவரி-இணைப்பு திட்டத்தில் கடைகோடியான தமிழகத்திற்கு பலன் கிடைக்காமல் ேபாகலாம். எனவே முதல்வர் நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து மத்திய அரசிடம் 200 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு நிரந்தரம் என்ற உறுதியை பெற்றுத்தர வேண்டும் என காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச் சங்கம் விடுத்துள்ள அறிக்கை:கோதாவரி காவிரி இணைப்பு 1,465 கி.மீ நீளம் கொண்ட திட்டம். இத்திட்டம் ஓடிசா, மராட்டியம், மத்தியபிரதேசம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடாகா, சதீஷ்கர் ஆகிய 7 மாநிலங்கள் வழியாக கடைசியில் தமிழ்நாட்டுக்கு நீர் வர வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் தங்கள் பகுதியில் வறட்சியான பகுதிக்கு கோதாவரி நீரை கொண்டு செல்ல திட்டம் தீட்ட ஆரம்பித்துவிட்டன. கோதாவிரி ஆற்றிலிருந்து 1,100 டி.எம்.சி தண்ணீர் பயனின்றி கடலில் கலக்கிறது. அதில் 300 டி.எம்.சி தண்ணீர் வறட்சி மாநிலமான தமிழ்நாட்டிற்கு தருவதாகவே இத்திட்டம் என்று கூறப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறைந்தபட்சம் 200 டி.எம்.சி நீர் கிடைக்கும் என்கிறார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தமிழகத்திற்கு 125 டி.எம்.சி கண்டிப்பாக தர வேண்டும் என்கிறார். ஆனால் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் தனது வரைவு திட்ட மதிப்பீட்டில் தமிழகத்திற்கு 83 டி.எம்.சி தருவதாக கூறியுள்ளது. ஆரம்ப கட்டத்தில் 49 டி.எம்.சி தருவோம் என்று கூறுகிறது. அதே சமயம் கோதாவரியில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் தான் மிகை நீர் கிடைக்கும். மற்ற 9 மாதங்களில் கிடைக்காது என்கின்றனர் நிபுணர்கள். கோதாவரி காவிரி இணைப்பை நல்ல எண்ணத்துடன் மத்திய அரசு தொடங்கினாலும் 1,465 கி.மீ. 7 மாநிலங்கள் உபயோகித்தது போக தமிழ்நாட்டிற்கு எவ்வளவு நீர் கிடைக்கும் என்பதை நினைத்துப் பார்ப்பது கடினமாகவுள்ளது.ஆகவே தமிழக நிபுணர்களுடன் மத்திய அரசை சந்தித்து குறைந்தது 200 டி.எம்.சி தமிழ்நாட்டிற்கு நிரந்தரம் என்ற உறுதியை பெற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச் சங்கம் வேண்டுக்கோள் விடுத்துள்ளது.





Tags : professionals ,Godavari-Cauvery Connection Project Store ,CM ,
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...