×

பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு மர்மநபர்கள் கைவரிசை

திருக்காட்டுப்பள்ளி, அக். 15: பூதலூரில் நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பூதலூர் காளியம்மன் கோயில் தெரு பாஸ்கர் மனைவி மல்லிகா (40). இவர் பூதலூர் கடைவீதியில் உள்ள தனியார் ஹோட்டலில் வேலைபார்த்து வருகிறார். வழக்கம்போல் நேற்று அதிகாலை 5 மணிக்கு வேலைக்கு செல்வதற்காக கடைவீதியில் நடந்து சென்றார். அப்போது பின்னால் இருந்து பைக்கில் வந்த மர்மநபர்கள், மல்லிகா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து பூதலூர் காவல் நிலையத்தில் மல்லிகா புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED விலை உயர்ந்த கார்களை ஏமாற்றி விற்ற பெண் கைது