×

எலக்ட்ரானிக்ஸ் கடையில் காப்பர் வயர் திருடிய வாலிபர் கைது

பெரம்பலூர், அக். 15: பெரம்பலூரில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடையில் காப்பர் வயர்களை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் எலக்ட்ரானிக்ஸ் கடை உள்ளது. அந்த கடையின் எதிர்புறம் குடோன் உள்ளது. அங்கு பேன், மிக்சி, யூபிஎஸ், ஸ்டெப்லைசர் போன்ற பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பகல் 12 மணியளவில் யாரும் எதிர்பாராத வகையில் எலக்ட்ரானிக்ஸ் கடை ஊழியர்கள் குடோனுக்கு சென்றபோது, அங்கு மர்மநபர் ஒருவர், குடோனில் இருந்த பொருட்களில் உள்ள காப்பர் வயர்களை திருடி கொண்டிருந்தார்.

அப்போது மர்மநபரை கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்து பெரம்பலூர் போலீசில் ஒப்படைத்தனர்.இதையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் குரும்பாபாளையம் தெற்கு தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் மணிகண்டன் (எ) செல்வக்குமார் (28) என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து செல்வகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : electronics store ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது